யாழில் நிர்மாணிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் பாரிய சர்ச்சை!
யாழ். காங்கேசன்துறை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த விடயம் குறித்து வீதி அதிகாரசபையின் தலைமை பொறியியலாளர் சுதாகர், நிர்வாக பொறியியலாளர் பி.குலோ ஆகியோரால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,K.K.S காங்கேசன் துறை Jaffna என்ற முகவரியில் அமைக்கப்பட்டு வரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்பாக பல விமர்சனங்கள் வீதி அதிகாரசபையின் அனுமதி தொடர்பாக எழுந்துள்ளதுடன், ஊடகங்களும் இவ் சட்டரீதியற்ற கட்டிட அமைப்பு பற்றி பல தடவைகள் தங்களது விசனங்களை தெரிவித்துவருகின்றனர்.
இது பெற்றோலிய கூட்டுத்தாபன பொறியியல் பிரிவினர் நன்கு அறிந்த மோசடிக்கான ஒரு கட்டிட அமைப்பு என்பதும் இதில் யாருடைய சுயலாபதிற்காக அரச பணத்தில் நலம் பெற்றுவருவது என்பது பல ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இது உங்கள் கவனத்திற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
மேலும் உங்கள் அதிகாரி தயாபரன் இவர்களுடைய கட்டிட வேலை 15மீற்றர் தூரத்திற்கு அப்பால் அமைய வேண்டும் என அறிவுறுத்திய பின்னும் அதன் 13.5 அடி மூன்று பாரிய கொள்கலனை RDA எல்லைக்கும் பாரிய குழிகளை வெட்டி அதனை மண்ணோடு மண்ணாக புதைக்க பாரிய உதவிகளை செய்தார் என்பது மறைக்க முடியாது.
அவருடைய செயற்பாடுகள் ஆதாரபூர்வமாக உள்ளது. உங்கள் அதிகாரிகள் சிலரின் பாரிய விரும்பதகாத அறுவருக்கும் செயல்களை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது.
நீங்கள் ஒரு ஆபத்தான கட்டிட அமைப்பிற்கும் சேமிப்புதாங்கி மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கான கனரகவாகனம் தறித்து நிற்கும் பகுதியிற்கான பாரிய PIPELINE வேலைகள் உங்களுடைய RDA எல்லைகளிள் உள்ள போதும் உங்கள் அதிகாரிகளிடம் இவ்வாறான செய்திகளைக் கொண்டு செல்லும் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் இவர்கள் தங்கள் நிலை மறந்து மக்கள் சேவகர் என்ற நிலை மாறி உயிர் அச்சுறுத்தல் விடும் வகையில் நடந்து கொள்ளுதல் RDA அதிகாரிகளின் மீது சந்தேகம்வலுக்கின்றது.
மேலும் 13.5 அடி நீளமான தாங்கி RDA எல்லைக்குள் இடப்பட்பட்டுள்ளதா என்பதை கணிதப்பிரிவில் கற்றுக்கொண்ட உங்களால் இதற்கான உண்மை நிலையை உய்த்தறிதல் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இச்சூழலில் வாழும் மக்களிற்கு சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RDA எல்லையில் இருந்து 40 அடி தூரத்தில் தற்போது மீள்நிரப்புவதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுஇ வருகின்ற 24ம் திகதி யாழ் அரச அதிபரினால் திறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான முறைக்கேடான கட்டடதிற்கு அரச அதிகாரிகள் பலம் சேர்ப்பதன் நோக்கம் என்ன? இலாபம் என்ன? என அறியவிரும்புகின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.