தென்சீனக் கடல் பகுதியில் தங்கள் நாட்டு கண்காணிப்பு விமானத்தை ஆபத்தான வகையில் சீனப் போர் விமானம் இடைமறித்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான RC-135 ரக கண்காணிப்பு விமானத்தை அதிவேகமாக பறந்துவந்த சீனாவின் J-10 ரக போர் விமானம் மிக ஆபத்தான முறையில் நடுவானில் இடைமறித்தததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அத்துமீறலுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விமானத்தை இடைமறித்த சீனப் போர் விமானம் வந்த அதிகபட்ச வேகமானது, ஆபத்தான நோக்கத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.