பண்பாட்டை தொலைத்து விட்டு விடுதலை பயணத்தை முன்னெடுக்க முடியாது!
நாம் எமது பண்பாட்டை தொலைத்து விட்டு, எமது இனத்தின் விடுதலைப் பயணத்தை முன்னெடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பன்னங்கண்டியில் நேற்று இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எந்த ஒரு இனமும் தன்னுடைய இனத்தின் இருப்பை தக்க வைப்பதற்கு தமது பண்பாடுகளையும், நாகரீகத்தையும் கல்வியையுமே தக்கவைக்கிறார்கள்.
தமிழர்களின் நன்றி மறவாமை என்கிற உயரிய பண்பாட்டிற்கு எடுத்துக் காட்டாக தைப்பொங்கல் விளங்குகிறது.
அந்தப் பொங்கல் நிகழ்வினை சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சனசமூக நிலையமும் இணைந்து நடத்துகின்றது.
அவர்களின் இந்த பணி போற்றுதற்குரியது.
விளையாட்டு கழகங்கள் வெறுமனே விளையாட்டுப் போட்டிகளை மட்டும் நடத்தாது எமது இனத்தின் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கின்ற உயரிய செயலையும் செய்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.