வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு

வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு

வவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த யாத்திரிகைக்குரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நிலைகள் காணப்பட்டுள்ளதுடன் காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எவையும் யாத்திரிகையை உரிமை கோரியவர்களிடம் இருக்கவில்லை.

எனினும் ஆவணங்களை கொண்டுவரும் பட்சத்தில் அது குறித்து சபையின் தீர்மானிப்பதாக பௌத்த தேரர்களிடம் நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பட்டணசபை செயற்பட்ட காலத்தில் யாத்திரிகை விடுதிக்காக கண்டி வீதியிலுள்ள விகாரைக்கு குறித்த யாத்திரிகை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை பராமரித்து வந்த விகாரதிபதி மற்றும் பலர் தற்போது பௌத்த யாத்திரிகை விடுதி என்று அதனை அழைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அதற்குள் பல வியாபார நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்ட வியாபார நிலையங்கள் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு காணிக்கான ஆவணங்களை தயார்படுத்தும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த காணியின் ஆவணங்களை கோரி 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொதுமக்கள் ஒன்றிணைந்து நகரசபை தலைவர் தலைமையில் கூடி ஒரு மணி நேரமாக ஆரயப்பட்டுள்ளது.

இதன்போது நகரசபை தவிசாளர், உப நகர பிதா, நகரசபை உறுப்பினர் ரி. கே. இராஜலிங்கம், நகரசபை செயலாளர் ஆர். தயாபரன், பிரதம கணக்காளர் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது காணிக்கான ஆவணங்கள் எவையும் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவில்லை.

காணிக்கான ஆவணங்கள் பிரதேச செயலகத்திடம் உள்ளதாகவும் அதனைப் பெற்று தருவதாகவும் பௌத்த தேரர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நகரசபைக்கு வழங்கும் பட்சத்தில் நகரசபை உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பதிலினை வழங்குவதாக நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1668 Mukadu · All rights reserved · designed by Speed IT net