கடந்த இரண்டு மாதத்தில் பாரிசிலிருந்து 4 தமிழ் இளைஞர்கள் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டதால் மட்டும் அவர்கள் நாடுகடத்தப்படவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் பாரிஸ் நகரத்தில் வன்முறையில் ஈடுபடுவர்களாக ஏற்கனவே காவல்துறையால் அடையாளம் காணப்பட்டவர்கள்.
ஏற்கனவே மூன்று தடவை அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து விடப்பட்டிருந்தார்கள்.மூன்றாவது நபர் அரசியல் தஞ்சம் பெற்று பின்னர் அதை சிறீலங்காவுக்கு சென்று வருவதற்காக தொழில்முறை சார் விசாவாக மாற்றியவர்.குடும்ப வன்முறையில் ஈடுபட்டதற்காக அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்.
அடுத்தவர்; தவறான வழிகாட்டலால் அகதி அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பிப்பதை நிறுத்திவிட்டு பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு சென்று கடவுச் சீட்டு எடுத்து தொழில் சார் விசாவுக்கு பெருந்தொகை பணத்தை தரகர்களுக்கு கொடுத்து விண்ணப்பித்து அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இரவு வேலைக்கு சென்று வரும்போது சத்தலே தொடருந்து நிலையத்தில் வதிவிட அனுமதி இல்லாததற்காக கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்கிறார்.
இவர்கள் சாதாரண அகதிகள் விடயத்தில் கையாளப்படும் இரண்டுவாரத்துக்கு மேற்பட்ட தடுப்புக்கால கால அளவில் அல்லாமல் விரைவு நீதிமன்ற நடவடிக்கை மூலம் நாடுகடத்தப்பட்டிருக்கிறர்கள்.
நன்றி சிவா சின்னபொடி