வவுனியாவில் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு
வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த, அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது.
இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய, காணி விடுவிப்பிற்கான பத்திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்தார். அதன்பின்னர் ஆளுநர் அதனை வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவிடம் கையளித்தார்
இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74 ஏக்கர் அரச காணிகளும், 13.64 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.