போதைப்பொருளிலிருந்து பாதுகாப்பாய் இருக்க கற்றுக்கொள்வோம்!
இலங்கையில் அதிகூடிய மதுபாவனையாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்திலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் போதைப்பொருளிலிருந்து பாதுகாப்பாய் இருப்பதற்கு மாணவர்களாகிய நாம் கற்றுக்கொள்வோம்’என்னும் தலைப்பிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு – ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஏற்பாட்டில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பொலிஸார் என பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
பிடிக்காதே, பிடிக்காதே புகையினை பிடிக்காதே, ஒழிப்போம் ஒழிப்போம் போதையினை ஒழிப்போம் என்னும் கோசங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு நகர் ஊடாக குறித்த பேரணி நடைபெற்றுள்ளது.
இதன் போது போதைப்பாவனைக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.