மிளகாய்த்தூள் வீச்சு அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு
கடந்த வருடம் நவம்பர் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மிளகாய்த்தூள் வீச்சு மற்றும் கைகலப்பு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் தலைமையிலான இக்குழுவில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா, ஜே.வி.பியின் எம்.பி. பிமல் ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, சந்திரசிறி கஜதீர ஆகியோர் அங்கத்தவர்களாக இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சமல் ராஜபக்ஷ, சந்திரசிறி கஜதீர ஆகியோர் விசாரணைகளைப் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.