சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம்!
சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த காலவரையரைக்குள் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) உரிய பிரிவுகளுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சேனா படைப்புழு தாக்கத்திற்கு உள்ளான விவசாயிகளின் விளைநிலங்களுக்கு, ஏக்கருக்கு தலா 40,000 ரூபாய் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
குறித்த புழுவின் தாக்கத்தால் விவசாயிகள் தமது விளைச்சலை இழந்தனர். இவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன் பிரகாரம், அவர்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.