ஜேர்மனி அரசாங்கம் 9000 அகதிகளை நாடு கடத்தியது!

ஜேர்மனி அரசாங்கம் 9000 அகதிகளை நாடு கடத்தியது!

கடந்த ஆண்டில் மாத்திரம் 9000 அகதிகளை ஜேர்மனி அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனிய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியில் ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடையில் 51,558 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 35,375 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer இத்தாலியையும் கிரீஸையும் அங்கு முதலில் பதிவு செய்த அகதிகளை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியிருந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் விதிகளின்படி, எந்த நாட்டில் ஒரு அகதி முதலில் வந்திறங்குகிறாரோ, அந்த நாடுதான் அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2815 Mukadu · All rights reserved · designed by Speed IT net