ஜெயலலிதா மரண விசாரணையில் புதிய திருப்பம்!

ஜெயலலிதா மரண விசாரணையில் புதிய திருப்பம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்போவதில்லையென ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்துள்ளார்.

சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது வழக்கறிஞர்கள் ஆணையத்துக்கு வழங்கி வருவதால், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ளத்தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் மூலம், சசிலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தும் முடிவையும் ஆணையம் கைவிட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் உறவினர்கள் மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் வைத்தியசாலையின் வைத்தியர்கள் என இதுவரை 140க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைளை மேற்கொண்டுள்ளதோடு அவர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3599 Mukadu · All rights reserved · designed by Speed IT net