இலங்கையிலுள்ள தாயை பார்க்க வந்த யுவதிக்கு பாலியல் துஷ்பிரயோகம்!

இலங்கையிலுள்ள தாயை பார்க்க வந்த யுவதிக்கு பாலியல் துஷ்பிரயோகம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை சுவிஸ் நாட்டவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

24 வயதான ஜேர்மன் பெண்ணை 50 வயதான சுவிஸ் நாட்டவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த நபர் கைது செய்யயப்பட்ட நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

50 வயதான சுவிஸ் நாட்டவருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில், 24 வயதான ஜேர்மன் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண் விமான நிலையத்தில் பை எடுக்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த சந்தேக நபர் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள். நான் உங்களை காதலிக்கின்றேன் என கூறியவாறு பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் அவர் பிணை வழங்குமாறு கோரியுள்ளார். எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் பெண்ணின் தாயார் இலங்கையை சேர்ந்த பெண் எனவும், அவர் தனது தாயை பார்ப்பதற்காக நாட்டிற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net