வவுனியாவில் நிர்க்கதியான இரு சிறுவர்கள் பொலிசாரால் மீட்பு
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 7 வயது மற்றும் 9வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை என்று சொல்லப்படும் ஒருவருடன் நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததை அவதானித்துள்ள வியாபார நிலைய உரிமையாளர்கள் பொலிசாருக்கு இத்தகவல்களை வழங்கியுள்ளனர்.
நேற்று மாலை பொலிசார் இரு சிறுவர்களையும் சிறுவர்களின் தந்தை என்று நம்பப்படும் மதுபோதையிலிருந்த நபர் ஒருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை முதல் மாலை வரை வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் 7வயது மற்றும் 9வயது மதிக்கத்தக்க பெண் ஆண் என இரு சிறுவர்கள் தமது தந்தை என்று சொல்லிக்கொண்ட நபர் ஒருவருடன் நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததை அவதானித்துள்ள வர்த்தகர்கள் சிலர் அவர்களின் நடவடிக்கையில் சற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று மாலை 5மணியளவில் வவுனியா பொலிசாருக்கு இத்தகவலை வழங்கியுள்ளனர்.
சிறுவர்பிரிவு பொலிசார் பேருந்து நிலையத்தில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்ததுடன் தந்தை என்று அழைக்கப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது அவர் மது போதையிலிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரு சிறுவர்களையும் மதுபோதையில் காணப்பட்ட தந்தை என்று சிறுவர்களினால் அழைக்கப்பட்ட நபரையும் அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.