மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள்?
மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் நேற்று தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து நல்லாட்சிக்கான அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
ஒரே கொள்கையை உடைய கட்சிகளை தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தயார் என சிரேஷ்ட் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தேச தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம் என அமைச்சரொருவர் தெரிவித்தார் எனவும் சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது