அச்சுறுத்தும் படைப்புழு – விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
மறு அறிவித்தல் வரை பெரும்போக சோளம் பயிற்செய்கைளை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
படைப்புழு தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் பயிர்நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, படைப்புழுவை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.
படைப்புழுவை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பி ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புழுவினால், அதிகளவான விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த புழு விரைவாக தொற்றிவருவதால், தாக்கத்திற்குள்ளான பயிர்ச்செய்கையை அழித்துவிடுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கம் 250 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.