உத்தர தேவி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்.

உத்தர தேவி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்.

கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான உத்தர தேவி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

உத்தர தேவி புகையிரதம் இன்று காலை 6 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

அதன் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்கும் வசதி கொண்ட இந்த புகையிரதத்தில் முதலாம் வகுப்புப் பெட்டியும் இரண்டாம் வகுப்புப் பெட்டியும் குளிரூட்டப்பட்டவை.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த புகையிரதம் வடக்கு, தெற்கு நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் சேவையில் ஈடுபடுகின்றது என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த புகையிரதத்தின் இன்றைய முதலாவது சேவையில் யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள், அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net