பாதுகாப்புச் செயலரின் பதவியில் மாற்றமில்லை!
பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனான்டோவினது பதவியில் மாற்றம் எதுவும் கொண்டு வரப்போவதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் தர்மசிறி எக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனான்டோ படையினரை விமர்சித்து கருத்துத் தெரிவிக்கவில்லை. அவர் கூறிய கருத்துக்கள் ஊடகங்களில் தவறாகப் புரியப்பட்டுள்ளது.
இதனால் அவரை பதவி நீக்க வேண்டும் என எழுந்துள்ள விமர்சனங்களை அடிப்படையாக வைத்து அவர்மீது எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுவதற்கிணங்க பாதுகாப்புச் செயலாளர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை” என தர்மசிறி எக்கநாயக்க மேலும் குறிப்பிட்டார்.