தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் பூங்கதிர் 6 இதழ் வெளியீட்டு விழாவும்
கிளிநொச்சி பூநகரி பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் பூங்கதிர் 6 இதழ் வெளியீட்டு விழாவும் இன்று(29-01-2019) பூநகரி பிரதேச பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பூநகரி பொது நூலகத்தினால் கடந்த ஆண்டில்; தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் பொது நூலகத்தினால் வெளியிடப்பட்டு வருகின்ற பூங்கதிர் சஞ்சிகையின் ஆறாவது இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.
பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ ஐயம்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக் பூநகரி பிரதேச செயலாளர் எஸ் கிருஸ்னேந்திரன் பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கான பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன் வருடாந்தம் வெளியிடப்படுகின்ற பூங்கதிர் என்ற நூலின் ஆறாவது இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இதில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர் உபதவிசாளர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.