கிளிநொச்சி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
கிளிநொச்சியில் விவசாயிகள் நெல் அறுவடைக்காக கொண்டு செல்லும் அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் என்பவற்றை வீதியில் கொண்டு செல்வதற்கு பொலிஸார் இடையூறுகள் ஏற்படுத்த மட்டார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட விவசாயக் குழுக்கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் பரந்தன் சந்தி தொடக்கம் புளியம்பொக்கணை சந்தி வரையான பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்லும் போதும், அறுவடை செய்கின்ற நெல்லை வீடுகளுக்கு கொண்ட வருகின்ற போதும், வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் அவற்றை மறித்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், இரகசியமான முறையில் பணங்களைப் பெற்று வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆகவே இதனை தொடர்ந்து குறித்த விடயத்தில் பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலை நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நெல் அறுவடை இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் வீதிகளில் கொண்டு செல்ல வேண்டுமென்றும் மேலும் தெரிவித்துள்ளார்.