மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை தனி விமானம் மூலம் அழைத்துவர நடவடிக்கை?

மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை தனி விமானம் மூலம் அழைத்துவர நடவடிக்கை?

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத்தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் இணைந்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறுப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஸ் டுபாயிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

அவருடன் நான்கு பாதாள உலக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கைதானவர்களில் இலங்கை பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்தே தினுக, கஞ்ஜிபானி இம்ரான், ரனாலே சூட்டா மற்றும் அங்கொட சுத்தா ஆகியோரும் உள்ளங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் தனி விமானமொன்றின் ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Copyright © 7709 Mukadu · All rights reserved · designed by Speed IT net