திடீர் சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை தொடர்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ருவான் குணசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் 5022 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பொலிஸார் அடிக்கடி தற்போது ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.