காணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே மாரடைப்பால் தாய் மரணம்.

காணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே மாரடைப்பால் தாய் மரணம்.

மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா மாரடைப்பால் மரணமாகியுள்ளார்!

வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் போராளியாக ஒருவர் தடுப்பு முகாமிலிருந்து வந்தவர், மற்றும் காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

ஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைந்து உயிரிழிந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று சரஸ்வதியம்மாவும் தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

Copyright © 5233 Mukadu · All rights reserved · designed by Speed IT net