மரண தண்டனையை எதிர்க்கும் கத்தோலிக்க திருச்சபை!
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் கற்பித்தலுக்கு அமைய எந்த காரணம் கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் போதைப் பொருளை ஒழிக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.
குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், சமய தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக போதைப் பொருளை ஒழிக்க நீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 14 ஆயர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.