புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்க தெரிவுக்குழு கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், பொலிஸாரின் நேரடி ஆதரவுடனேயே திருகோணமலை தென்னமவராடியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சிலை அமைப்பதற்கு தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் துணை செல்கிறது என்றும், இதை அனுமதிக்க முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சமயத்தில் பௌத்த மதகுரு ஒருவர் எவ்வாறு அங்கே புத்தர் சிலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்? என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளரிடமும், திருகோணமலை பிரதேச பொலிஸ் அத்தியட்சகரிடமும் கேள்வி எழுப்பியுள்ளார்.