புங்குடுதீவு மாணவி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமாரின் தாயார் மற்றும் மற்றுமொரு சந்தேக நபரின் தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு இட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள இரு பெண்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ. சபேசன் முன்னிலையில் முற்படுத்தப் பட்டனர்.
அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு இட்டார்.
குறித்த இரு பெண்களில் ஒருவர் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது தயாரான மகாலிங்கம் தவராணி என்பவராவர் மற்றையவர் மற்றுமொரு சந்தேக நபரான சிவதேவன் துஷாந்தன் என்பவரின் தயாரான சிவதேவன் செல்வராணி என்பவராவார்.
குளோபல் செய்திகள்