வீழ்வேன் என நினைத்தாயோ…! ரஜனி ஸ்டைலில் அசத்திய பிரபல இலங்கை வீரர்!
நான் வீழ்வேன் என நினைத்தாயோ என இலங்கை அணியின் முன்னாள், நட்சத்திர கிரிக்கட் விரர் ரஸல் ஆர்னல்ட் தமிழில் டுவிட் பதிவொன்றை இட்டுள்ளார்.
டேர்பனில் நேற்றைய தினம் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஒரு விக்கட்டினால் இலங்கை அபார வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ரசல் ஆர்னல்ட் தமிழில் பதிவிட்டுள்ளார்.
“நான் வீழ்வேன் என நினைத்தாயோ? ஹாஹாஹா..” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “டேய் மாமா @SriniMaama16, குசல் பெரேரா எப்படி வைச்சி செஞ்சான் பாதியா? அவங்க ஆளுங்க, அவங்க இடம், அவங்க போலர்ஸ் …. எங்களுக்கு பயம் இல்ல. அதுக்கு இதான் சாம்பள்.
இது வெறும் ட்ரேய்லர் தான். பேட்ட பராக்” என இலங்கை வெற்றியை கொண்டாடி பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியை பொதுவாக விமர்சனம் செய்யும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த டெஸ்ட் வெற்றிக்கு பாராட்டு வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மரணிப்பதாக யார் சொன்னது, இலங்கை அணி அபரா வெற்றியை பதிவு செய்தது எனவும், குசால் பெரேராவின் ஆட்டம் பாராட்டுக்குரியது எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான பேட்ட திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் பேசிய நான் வீழ்வேன் என நினைத்தாயோ.. என்ற வசனம் ரசிகர் மத்தியில் பிரபல்யம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.