விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41
நாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்.
ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைச்சுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் நாட்டரிசி ரூ.80இற்கும், சம்பா ரூ. 85இற்கும் விற்பனை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நாடு ரூ.38, சம்பா ரூ.41 இற்கு நெல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார்.