எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலி!

எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலி!

இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலியாகியள்ளார்.

இறக்குவானை பரியோவான் தமிழ் வித்தியாலயத்தில், தரம் 3 இல் கல்வி பயிலும் எம்.பவித்திரன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்த்துள்ளார்.

குறித்த சிறுவன் பாடசாலை சென்று வீடு திரும்பிவிட்டு, தனது வீட்டின் அருகில் விளையாடிவிட்டு தவறுதலாக பாதையை நோக்கி ஓடி வந்த வேளை விரைவாக வந்த முச்சக்கரவண்டி சிறுவனின் உடலில் ஏறி விபத்துக்குள்ளாக்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த விபத்து காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 1834 Mukadu · All rights reserved · designed by Speed IT net