கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு முன்னால், உளவுத் துறை பல விஷயங்களைச் செய்யத் தவறியதாகக் குறைகூறியிருக்கும் பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணை ஒன்று, உளவு அமைப்புகளில் முழுமையான சீர்திருத்தத்தை கோரியுள்ளது.
நவம்பர் மாத பாரிஸ் தாக்குதலுக்கு முன்னால் உளவு துறையின் தோல்விகளை பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணை குறைகூறியிருக்கிறது.
உளவுத்துறையிலேயே, ஒன்றுடன் மற்றொன்று போட்டியிட்டு செயல்படும் நிறுவனங்கள் இருப்பதாகவும், எந்த நிறுவனம் என்ன பணியை செய்ய வேண்டும் என்று தெளிவுகள் இல்லை என்று அந்த விசாரணையின் அறிக்கை தெரிவிக்கிறது.
இவை அனைத்திற்கும் பதிலாக, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட கவனம் செலுத்தும் ஒரு தேசிய நிறுவனம் அமைய வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பெரு மற்றும் சிறு நகரங்களில் பாதுகாப்பு ரோந்து பணிகளை மேற்கொள்ள அதிக அளவிலான படைப்பிரிவுகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் செயல்திறனை பற்றி இந்த விசாரணை கேள்விகள் எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு சேவைகள் பற்றிய விரிவான விமர்சனத்தை இது தூண்டியது.
பிபிசி