எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்.

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்.

சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனை போல் வருவார்கள், அப்போது என்ன செய்கிறீர்கள் பார்க்கலாம்..

இவ்­வாறு முல்­லைத்­தீவு மக்­கள் ஆவே­சத்­து­டன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கோசம் எழுப்­பி­னார்­கள். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் பய­ண­மாக வடக்­குக்கு வந்­தி­ருந்­தார்.

இறுதி நாள் முல்­லைத்­தீ­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். அவ­ரது பய­ணத்­துக்கு எதிர்ப்­புத் தெரி­வித்துகாணி மீட்­புக்­கா­கப் போராடி வரும் கேப்­பா­பி­லவு மக்­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் அவர்­க­ளது உற­வி­னர்­கள் ஆகி­யோர் இந்­தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர்.

பொலி­ஸார் தலைமை அமைச்­ச­ரின் வாக­னத் தொட­ர­ணியை போராட்­டக்­கா­ரர்­கள் நெருங்­கா­த­வாறு பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

வெளி­யேறு வெளி­யேறு இரா­ணு­வமே வெளி­யேறு’, ‘எமது நிலம் எமக்­குச் சொந்­தம், எமது கடல் எமக்கு வேண்­டும், எமது வளம் எமக்கு வேண்­டும்’ என்று மக்­கள் கோச­மெ­ழுப்­பி­னர். எங்­க­ளு­டைய நிலத்­தில் இருந்து எமது வாழ்­வா­தா­ரங்­களை இரா­ணு­வம் எடுத்து உண்­ணும் போது நாங்­கள் இன்­னும் எத்­தனை வரு­டங்­கள் காத்­தி­ருப்­பது? நாங்­கள் இந்த வீதி­யில் காய்­கின்­ற­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுப்­ப­தற்­குத்­தான் இந்த அரசு ஏற்­பாடு செய்­கி­றது.

எங்­க­ளு­டைய வீடு, பூமி, காடு எல்­லாற்­றை­யும் நாங்­கள் அடுத்த சமு­தா­யத்­துக்கு விட்­டுச் செல்­ல­வேண்­டும். அதற்­குத்­தான் நாங்­கள் இந்த இடத்­தில் இருந்து இவ்­வ­ளவு பாடு­ப­டு­கி­றோம். ஒரு­நாள், இரண்­டு­நாள், ஒரு­வ­ரு­டம், இரண்டு வரு­டம் என்று இப்­போது மூன்­றா­வது வரு­ட­மா­கின்­றது.

எங்­க­ளு­டைய பிள்­ளை­கள் ஆகப் பேய­ராய் வாழ­மாட்­டாங்­கள். அடுத்த தலை­முறை இந்­தப் பிரச்­ சி­னைய எந்­த­வ­ழி­யில தீர்க்க வெளிக்­கி­டுதோ? எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்க்­கி­றது உங்­க­ ளுக்கு நல்­லது என்று பட்­டால் எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்த்து,

முடித்து வையுங்­கள். அல்­லது அடுத்த சந்­த­தி­தான் இதைத் தீர்க்க வேண்­டும் என்­றால் அது எங்கு போய் முடி­யும் என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று மக்­கள் தெரி­வித்­த­னர். மேலும் நாங்­கள் அணு­வ­ணு­வாகா சாவ­தை­விட போரா­டும் எல்­லோ­ரை­யும் ஒரே­ய­டி­யாக

அரசு சாக்­காட்­டட்­டும் என்­றும் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­கள் தெரி­வித்­த­னர்.

Copyright © 6964 Mukadu · All rights reserved · designed by Speed IT net