தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் உதவி.
தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் வறுமையில் உள்ள மக்களிற்கு உதவும் நோக்குடன் பௌத்த மத தலைவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களில் ஒரு பகுதி இன்று கிளிநொச்சியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இன்று முற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட இவர்கள் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை கிளிநொச்சி இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 300 மாணவர்களிற்கு பகிர்ந்தளித்துள்ளனர்.
இந்த உதவிக்காக தென்னிலங்கையில் மத தலைவர்களால் மடி பிச்சை மூலம் பெற்றுக்கொண்ட உதவிகளே இவ்வாறு பகிர்ந்தளிக்ப்பட்டதாகவும், இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த உதவிகள் பகிர்ந்தளிக்கும் முன்னர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.