புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்
ஆவணப்படம் பார்த்தேன்.
மனம் வீரிட்டது.
நான் மிகவும் மதிக்கும் ஆவணப்பட இயக்குநர்கள் அனந்த் பட்வர்த்தனும், அம்சன்குமாரும்
முதலாமவர் அரசியல் தளத்திலும்
இரண்டாமவர் பண்பாட்டுத்தளத்திலும் இயங்குபவர்கள்
தங்கேசும் ஞானதாசும் ஏனைய ஆற்றலுள்ள கலைஞர்களுடன் இணைந்து
தந்திருக்கும் புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்,
இவை இரண்டுமே கலந்தது.
யுத்த காலத்திலும் அதன் பின்னரும்
வடமாகாணம் எதிர்நோக்கிய , எதிர்நோக்குகின்ற பிரச்சனையின் ஒட்டுமொத்த விளைபொருள் என்ன என்பதை
பொட்டில் அறைந்தாற்போல சொல்லியிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான வெற்று மேடைப்பேச்சுக்களும்
நூற்றுக் கணக்கான “கதை“ப்புத்தகங்களும்
ஒரு சில ஆய்வு நூல்களும் தராத முழுமையை
இந்தப்படம் தருகின்றது.
ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் பார்த்து
தமது பிறந்த மண்ணுக்கு செய்ய வேண்டிய
“பிதிர்க்கடனையாவது“ செய்ய வேண்டும் என படம் அறைகூவுகிறது.
முள்ளிவாய்க்காலுக்கும் கிளிநொச்சிக்கும் மல்லாவிக்கும்
இருந்த ஒரு வரலாற்றுப் பாத்திரம் புங்குடுதீவுக்கும் (எதிர்மறையாக) இருந்தது. இருக்கிறது. இனிமேலும் இருக்கும்.
குறைந்தபட்சம் சிட்னியிலுள்ள தீவுப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. (ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மாவாவது பாருங்கோ.)
அது நிறைவேறாத ஆசை என்று தெரிந்தும் மனது அங்கலாய்க்கிறது.
என்னிடமும் கானா பிரபாவிடமும் இந்தப் படம் உண்டு. விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
தங்கேசையும் ஞானதாசையும் நேர்பட அறிவேன் என்பது வலி தரும் ஒரு விநோதமான மகிழ்ச்சி.
எழுத்தாளரும் கதைசொல்லியுமான ரஞ்சகுமாா்