ஆடிப்பிறப்பு‬ இன்று .

ஆடிப்பிறப்பை தலைமுறை கடந்தும் நினைவில் வைத்திருக்கும் பாடலாக …..
13681079_10208935422998200_4342613279259339430_n
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
13718537_10208935428078327_5522476296841987068_n

13709910_10208935421398160_4459719124910172282_n
தங்கத்தாத்தா‬ ”நவாலியூர்”சோமசுந்தரப்புலவர்‬…
இப் பாடல், தமிழ் நாட்காட்டியின் படி ‪ஆடிமாதத்தின்‬ ‪முதல்நாள்‬ எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதை விளக்குகின்றது.

நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பெருமைதனைத் தமிழகத்து அறிஞர் ‪#‎ஒளவைநடராசன்‬ அவர்கள் “செந்தமிழ் அமுதம்” என்ற நூலிலே இப்படி
பகிர்கின்றார் …
“தேனோ அமுதோ தெவ்ட்டா நறும்பாகோ
யானோ உவமை சுலவல்லேன் – மானேநீ
நன்னர் நவாலியூர் நற்சோம சுந்தரனார்
பன்னு தமிழ் நிலத்தைப் பார்”

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net