ரணில் சிறைக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டதா?
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மறைந்திருக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது கடந்த நான்கு ஆண்டுகளாக தாமதமாகி உள்ளது.
அரசாங்கத்தின் அதிகாரம் பலம் காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கை முடங்கியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் போது, பிணை முறி மோசடியின் உண்மையை மக்கள் அறிந்துக்கொள்ள முடியும்.தன்னை கைது செய்ய முடியாது என்பதாலேயே ரணில் விக்ரமசிங்க பல வருடங்களாக எதனையும் செய்யாமல் இருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவே இந்த மோசடியின் முதலாவது குற்றவாளி. இதனை தெரிவித்து, இலஞ்ச, ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரம் கைவிட்டு போகும் நாளில் ரணில் விக்ரசிங்க சிறையில் இருக்க நேரிடும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.