முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவும் பன்னிரெண்டாவது சிறப்பு இதழ் வெளியீடும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது,அவ் நிகழ்வில் உரையாற்றிய பங்குபற்றிய சமூக போராளி ஜெனி ஜெயசந்திரன் முகடு குறிந்து தனது சமூகத்தளத்தில் கூறி இருப்பதாவது .
Jenney Jeyachandran
31.07.2016 அன்று பிரான்ஸில் ‘தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை’ என்ற ஒரு இளைஞர் அமைப்பினரால் முகடு சஞ்சிகையின் 12வது இதழ் மூலம் பொதுவெளியில் தம்மை வெளிப்படுத்தி இந் நிகழ்வை சிறப்புற நடாத்திய இந்த இளைஞர் குழுமத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தங்களின் தனிமுயற்சியில் பல்தரப்பட்ட கருத்தாளர்களை பன்முகத் தேடல்களோடு அமைந்த தலைப்பு வடிவங்களினூடாக தாங்கள் கொண்ட கருத்தியல் மையத்தை விட்டகலாமல் நேர்த்தியாக அனைவரையும் உள்வாங்கி இந்த இளம் தலைமுறையினர் செயற்பட்ட விதம் ஒரு நம்பிக்கையை தருகின்றது.
இவர்களின் இந்த நேர்த்தியானது-தற்போது ஒரு வித இடைவெளியை அல்லது ஒரு தழும்பல் நிலையை கடந்து கொண்டிருக்கும் எமது சமூக நீரோட்டத்தில் இவர்களின் வரவை ஒரு ஆவலுடன் எதையோ தேடுகின்றது புலனாகின்றது.
இது ‘குருவியின் தலையில் பனங்காயை வைப்பதற்கு’ ஒப்பாகுமோ என சிந்திக்க தூண்டினாலும் காலத்திற்கு காலம் அனைத்து வரலாறுகளும் இப்படி சில ஒளிக் கீற்றுக்களை வெளிப்படுத்தும்.இதனை கெளவிப் பிடிப்பதுவோ- தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதுவோ அவரவர் ஆளுமையிலும் தொடரும் அர்ப்பணிப்புக்களிலும் தான் தங்கியுள்ளது.
எனவே தவிர்க்க முடியாமல் ஒரு வரலாற்று சுமையை தூக்கியுள்ள இவர்களுக்கு சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பையும் ஊக்கத்தையும் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம்.இரண்டு வருடத்தில் காலச்சீராக 12வது இதழாக மலர்ந்திருக்கும் இந்த குறிஞ்சி மலருக்கு முகடும் அத்திவாரமும் சிறப்பாக அமைந்திருக்கும் அதே தரத்தில் அதனுள்ளே குடிகொண்டிருக்கும் ஆக்கங்கள் இன்னும் பல விதத்தில் செப்பனிடப்பட வேண்டியுள்ளது.அதுவும் இந்த முகட்டிற்காகவே மலரும் ஆக்கங்களாக தொகுக்கப்படவேண்டியுள்ளது.
இதனை சமூக அக்கறையுள்ள ஆர்வலர்கள் தம் படைப்புக்களாக ‘அரசியல் சமூக பொருளாதார கலை கலாச்சார கல்வி மேம்பாடுகளை’ மையப்படுத்தி இந்த முகட்டின் ஸ்திர தன்மைக்கு உதவவேண்டும்.அதாவது இந்த இளைஞர்களோடு தோள் கொடுத்து அவர்களுடன் பங்காளர்களாக இணைய வேண்டும்.படைப்புக்களையும் கடந்து எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான மையப்புள்ளியை நோக்கி நகர்த்த இந்த இளம் தலைமுறைக்கு நாம் கை கொடுக்க வேண்டும்.
தொடரும் இவர்கள் பங்காற்றலுக்கு என்றும் எமது வாழ்த்துக்கள் இளைஞர்களே !