ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொண்டு 21 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணமாகவிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செலவீனங்களை குறைப்பதற்காக சர்வதேச நாடுகளுக்கான விஜயங்களை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்திக்க இருந்ததுடன் , அமெரிக்கா வாழ் இலங்கையர்களையும் சந்தித்து இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு செய்ய அனைவருக்கும் அழைப்பு விடுக்க இருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுக்கவிருந்ததாக எதிர்பார்க்கப்பட்டது.
வீரகேசரி