வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்.

வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்.

வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் முதல் அங்கமாக கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் எதிர்கொள்ளம் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அங்கு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள்,
மலையக மக்கள் தமது ஊதியத்திற்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமக்கான 1000 ரூபா ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அங்குள்ள பெண்கள் அதிகாலை முதல் முழு நாளாக தம்மை அர்பணித்து வேலை செய்கின்றனர்.

அவர்களிற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதே போன்று வெளிநாடுகளிற்கு வேலை வாய்ப்பு தேடி நாடு திரும்பும் பெண்களிற்கான வாக்குரிமைகள் பறிக்கப்படுவதாகவும் போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலை வாய்ப்பு தேடி வெளிநாடுகளிற்க்கு உள்ள பெண்களின், வெளிநாடுகளில் உள்ள மக்களிற்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தனர்.

அதேபோன்று நுண்கடனால் இன்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து போராட்டகாரர்கள் பேரணியாக கிளிநொச்சி கூட்டுறவு மண்டபம் வரை சென்றனர்.

அங்கு சர்வதேச பெண்கள் தின மாநாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net