ஐ.நா. பரிந்துரையில் தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்கள்!

ஐ.நா. பரிந்துரையில் தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்கள்!

ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரையில் தமிழ் மக்கள் குறித்து சில சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பான அறிக்கையில் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“தமிழ் மக்களின் பல வருட கால போராட்டத்தின் காரணமாகவே தமிழர்களின் விடயங்கள் சர்வதேசத்திற்கு தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே இலங்கை தொடர்பான பல சாதகமான விடயங்களை ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரையில் உள்ளடக்கியுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net