அரசியல் கைதியின் குடும்பத்துக்கு சாந்தநாயகி நற்பணி மன்றம் மூலம் உதவி வழங்கி வைப்பு

13950942_1248920408485512_1926327551_o
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்க பட்டு இருக்கும் அரசியல் கைதியான சு.செந்தூரன் அவர்களின் குடும்பம்
யாப்பாணத்தில் இருந்து 1990 இல் இடம் பெயர்ந்து வவுனியா நாகர்இலுப்பை குளத்தில் தட் காலிகமாக வசித்து வரும் நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தால் ஓமந்தை கள்ளிகுளத்தில் அவரின் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் காணி வழங்க பட்டுள்ளது .

அவரின் தந்தையான பெருமாள் சுப்பிரமணியம் ,தாய் தங்கமணி ,தங்கை காயத்திரி ,தம்பி ஆரூரன் ,ஜெயரூபன் என அவரது குடும்பத்தின் மூத்த பிள்ளையான செந்தூரன் 2006.07.13 இல் கைது செய்யப்பட்டு பிணை வழங்க முடியாது என மறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் .மகனின் பிரிவால் மனம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை ,இளைய மான் ஆருரனின் உழைப்பில் அன்றாட வாழ்வுக்கே சிரமமான நிலையில் வழங்க பட்டுள்ள காணியில் ஒரு குடிசை போட உதவுமாறு தமிழ் விருட்சம் ஊடாக சாந்தநாயகி நற்பணி மன்றத்திடம் வேண்டுகோளை விடுத்து இருந்த நிலையில் சாந்தநாயகி நற்பணி மன்றம் 20000.00 பெறுமதியான தகரம் .கிடுகு ,மணல் ,சீமெந்து உட்பட்ட பொருட்கள் 09.08.2016 அன்று வழங்கி வைக்க பட்டது.

களிமண்ணால் கட்டப்பட்டு பொலித்தீனாலும் ,காட்போட் மட்டையாலும் கூரை போட பட்டுள்ள தட் காலிக குடிசையை சீர் திருத்த இந்த உதவிகள் வழங்கப்படடன .

சாந்தநாயகி நற்பணி மன்றத்தின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),செயலாளர் மாணிக்க ஜெகன் ஆகியோர் செந்தூரனின் தாயார் தங்கமணி அவர்களிடம் கையளித்தனர் ,

இந்த உதவிகளை வழங்கிய சாந்த நாயகி நற்பணி மன்றத்துக்கு தனது மனமார்ந்த நன்றிகள் என்றார் .
சந்திரகுமார் (கண்ணன் )
வவுனியா13932156_1248920615152158_1308435603_o

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net