கையெழுத்துப் போராட்டத்தில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் சேகரிப்பு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் அமெரிக்காவின் உதவியைக்கோரி கடந்த 10நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் , திருகோணமலைப் பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு அமெரிக்காவின் உதவி கோரி வடகிழக்கு மாவட்டங்களில் சுமார் மூன்று இலட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்போராட்டம் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இரண்டு மாதகாலப்பகுதிக்குள் சேகரிக்கப்படவுள்ள இக்கையெழுத்துக்கள் இன்றுடன் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் இக் கையெழுத்துக்கள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.