தமிழர்களுக்கு விடிவு வந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா மற்றும் இலங்கை உறுதி!
இந்திய மற்றும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு வந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது என தென்னிந்திய திரைப்பட நடிகரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இனப்பகை அரசியல் காரணமாக தமிழர்களுக்கு விடிவு வந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது. இந்தியாவும் இலங்கையும் எப்போதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை.
அதன் வெளிப்பாடுதான் இந்தியா அமைதி காக்கின்றது என்பதை நாம் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா தமிழர்கள் பக்கம் நின்று பேசினால் ஜெனீவா அரங்கில் புதிய மாற்றம் வரும், ஆனால் அது எப்போதும் நடக்காது. இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வேறு என்னதான் இதற்கு தீர்வு என்றால் தொடர் மக்கள் திரள் போராட்டமே, இந்தியா இலங்கையின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கான ஆயுதமாகும்.