வறுமை ஒழியும்வரை பொருளாதார வளர்ச்சி குறித்து மகிழ முடியாது!
வறுமை முழுமையாக ஒழியும்வரை அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு எவரும் மகிழ்ச்சியடைய முடியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“நாம் எப்போதும் அடித்தட்டு மக்களை முன்னேற்ற வேண்டும் என்றே விரும்புகிறோம்.
புள்ளிவிபரங்களுக்கு அடிப்படையில் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி குறித்து பேசினாலும், வறுமை ஒழியும் வரை இவற்றை வெற்றி என்று எம்மால் ஒருபோதும் கூறமுடியாது.
நாம், இதற்காகத் தான் கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டோம். அரசாங்க வேலையை மட்டும் வழங்காமல், தொழில் வாய்ப்புக்களை அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தோம்.
இதற்கு முதலாவதாக எமது கல்வி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது எதிர்க்காலத்தில் அமையவுள்ள அரசாங்கத்துக்கு சவாலான ஒன்றாகவே இருக்கிறது.
விவசாயத் துறையை மாணவர்களிடத்தில் ஊக்குவிக்க வேண்டும். இதுவும் எமது சமூகத்துக்கான கட்டாயமானத் தேவையாகவே இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.