நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்பு

நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

பூநகரி அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநொச்சிக்கு கப் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட முதிரை மர குற்றிகளே இவ்வாறு பொலிசாரால் கைப்பெற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பொலிசாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆளங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த மர குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

கப் வாகனம் ஒன்றில் மேற்குறித்தவாறு முதிரை மர குற்றிகள் எடுத்து செல்லப்படுகின்றது என பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய பூநகரி பொலிஸ் பொறுப்பதிகாரி கபிலபண்டார அவர்களின் வழிநடத்தலில், உப பரிசோதகர் பூங்குன்றன் தலைமையிலான குழுவினரே குறித்த சோதனை நடவடிக்கையின்போது பெறுமதி வாய்ந்த மர குற்றிகளை மீட்டுள்ளனர்.

குறித்த சோதனையின்போது மரக்குற்றிகளை ஏற்றிவந்த வாகன சாரதி மற்றும், உதவியாளர் தப்பி சென்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மரக்கடத்தல் மற்றம் மண் கடத்தல்கள் இடம்பெற்று வரும் நிலையில், பொலிசார் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 Mukadu · All rights reserved · designed by Speed IT net