யுத்தகாலத்தில் அரும்பணியாற்றிய பெண் சட்டத்தரணி காலமானார்.
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான தேஜ்ஸ்ரீ தாபா காலமானார்.
திடீர் சுகயீனமுற்ற இவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நியூயோர்க்கில் தனது 52ஆவது வயதில் காலமானார்.
நீதிக்காக கடுமையாக போராடிய நேபாள் சட்டத்தரணியும், மனித உரிமை ஆர்வலருமான தேஜ்ஸ்ரீ தாபாவின் மறைவு முழு உலகையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளராக இவர் முதல் முறையாக மனித உரிமைகளுக்கான பணியை ஆரம்பித்தார்.
அதனை தொடர்ந்து இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஐ.நா. நிறுவனத்திற்காக பணியாற்றினார்.
உலகளாவிய ரீதியில் இடம்பெறும் பாலின ரீதியிலான வன்முறைகளை அறிக்கையிடுவதன் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு தனது அர்ப்பணிப்பான சேவையை வழங்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் இவர் சேவையாற்றிய இருந்தார்.
இவரது மறைவு குறித்த செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.