சரியானவர்களை தெரிவு செய்யாவிடின் இன்னொரு அரசியல் முள்ளிவாய்க்காலை சந்திக்க நேரும்!
தமிழ் மக்கள், தமக்கான சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் இன்னொரு அரசியல் முள்ளிவாய்க்காலை பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்கொள்ள நேரிடும் என்று சட்டத்தரணி சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, ஜெனீவாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ஜெனீவாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரிதும் ஏமாற்றமான விடயம்.
தமிழ் மக்கள் இனியாவது சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யாவிட்டால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணல்நீராக செல்லும். மேலும் இந்த விடயம் ஐ.நா. வுடன் முடக்கப்படும் அபாயம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.