புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை!

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை!

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net