புலனாய்வுப் பிரிவின் அசமந்த போக்கே குண்டுவெடிப்புக்கு காரணம்!
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு புலனாய்வுப் பிரிவில் அசமந்தப் போக்கே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்பு இடம்பெற்ற கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலயத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவது, முன்கூட்டியே புலனாய்வுப் பிரிவிற்கு தெரியாமல் போனது அவமானம் என்றும் சாடியுள்ளார்.
இது ஒரு வெறுக்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்ட முஜிபுர் ரஹ்மான், புலனாய்வுப் பிரிவின் தலைவர் இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.