மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்!
மக்களுக்கு தகவல்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு 24 மணித்தியாலங்களிலும் தகவல்களை வழங்கும் நோக்கில் மூன்று விசேட செயற்பாட்டு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள நிலையத்தில் 011-2322485 என்ற இலக்கத்தின் ஊடாகவும், வெளிவிவகார அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிலையத்தில் என்ற இலக்கத்தின் ஊடாகவும் 011-2323015 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் விசேட செயற்பாட்டுப் பிரிவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாகவும் மக்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.