குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தவறு!
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 என பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன.
எனினும், அந்த எண்ணிக்கை தவறென சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் உடல்கள் சிதறி பல பாகங்களாக காணப்பட்டன.
இதன்போது ஒரே உடலின் பாகங்களை வெவ்வேறு சடலங்களாக மதிப்பீடு செய்யப்படுவதற்கு சாத்தியங்கள் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 253 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையே உண்மையான தகவலென சுகாதார அமைச்சு அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளது