கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு
கிளிநொச்சி – உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் கைக்குண்டு காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கைக்குண்டை மீட்டுள்ளனர்.
அத்துடன் அதனை பாதுகாப்பு தரப்பினர் செயலிழக்க செய்துள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடந்தஇறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட குண்டாக இது இருக்கலாம் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.